இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
தங்களது வளமார்ந்த அனுபவமும், மதிநுட்பம் கொண்ட தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் பெரும் பங்காற்றியுள்ளது.
சமூகநீதியின் மீது தாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பும், ஒடுக்கப்பட்டோரை உயர்த்துவதற்கான தங்களது முயற்சிகளும் எங்கள் அனைவருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.
தங்கள் பயணம் தொடர்ந்து வெற்றியோடும் தாக்கம் செலுத்தும் பங்களிப்புகளுடனும் திகழட்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.