கோப்புப் படம். 
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: கரடி தாக்கியதில் ஒருவர் காயம்

ஜம்மு - காஷ்மீரில் கரடி தாக்கியதில் 40 வயது நபர் ஒருவர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஜம்மு - காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள மணிகம் கிராமத்தில் வசிப்பவர் பஷீர் அகமது(40). இவரை இன்று காலை கரடி ஒன்று திடீரென தாக்கியது. இதில் அவர் காயமடைந்தனர்.

உடனடியாக அவர் ஸ்ரீநகர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அந்த பகுதியில் கரடி நடமாட்டம் குறித்து வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கடந்த சில தசாப்தங்களாக காஷ்மீரில் மனித-விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

அதிகரித்து வரும் மனித மக்கள்தொகையின் காரணமாக வனவிலங்குகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பதே மனித-விலங்கு மோதலுக்கு முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

மேலும் கடுமையான வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் வேட்டையாடுதல் தடைசெய்யப்பட்டுள்ளதால், வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்த விவேகானந்த கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தலைக்கவசம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்: தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் டிஆர்பி தளத்தில் வெளியீடு!

SCROLL FOR NEXT