முகப்பு
இந்தியா

பெங்களூருவில் நாளொன்றுக்கு 150 டெங்கு பாதிப்பு: தகவல்

பெங்களூருவில் நாளொன்றுக்கு 150 டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்படவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 24 ஜூலை, 2024 at 11:00 AM
டெங்கு காய்ச்சல்
பகிர்:

கர்நாடக மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பெங்களூருவில் நாள் ஒன்றுக்கு புதிதாக 150 டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது, அதிகாரிகள் மற்றும் மக்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

மண்டல அதிகாரிகள், தங்களது பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி பெங்களூரு மாநகர முதன்மை ஆணையர் அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பெங்களூருவில் சுமார் 3,300 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மண்டல அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகளை நாள்தோறும் சந்தித்துப்பேசி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் அறிவுறத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை பெங்களூரு மாநகராட்சி தொடர்ந்து செய்து வரும் நிலையிலும், டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்துவது சவாலாக மாறியிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →