கங்கனா ரணாவத் 
இந்தியா

கங்கனாவின் வெற்றிக்கு எதிராக வழக்கு.. பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்!

கங்கனா வெற்றிக்கு எதிராக ஹிமாசல் பிரதேசம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு..

DIN

ஹிமாசல் பிரதேசம், மண்டி மக்களவைத் தொகுதியில் கங்கனா ரணாவத்தின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மண்டி தொகுதியில் போட்டியிட்ட கங்கனா ரணாவத், 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் விக்கிரமாதித்ய சிங்கை தோற்கடித்தார். கங்கனா 5,37,002 வாக்குகளும், விக்கிரமாதித்ய சிங் 4,62,267 வாக்குகளும் பெற்றனர்.

இந்த நிலையில், மண்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த கின்னார் பகுதியை சேர்ந்த லாயக் ராம் நெகி என்பவர் ஹிமாசல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, “எனது வேட்புமனுவை தவறுதலாக தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்துவிட்டார். வனத்துறையின் ஓய்வுபெற்ற அலுவலரான என்னிடம் தேர்தலில் போட்டியிட குடிநீர், மின்வாரியம் உள்ளிட்ட துறைகளிடம் இருந்து நிலுவையில்லா சான்றிதழ் கேட்டிருந்தனர். ஒருநாள் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், நான் சான்றிதழை சமர்ப்பித்தும் நிராகரித்துவிட்டனர். நான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க கங்கனாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

SCROLL FOR NEXT