திகார் சிறையில் உள்ள முதல்வர் கேஜரிவாலின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கண்டித்து இந்தியா கூட்டணி ஜூலை 30ல் பேரணியை நடத்தும் என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
சிறையில் கேஜ்ரிவாலைக் கொல்ல பாஜக சதி செய்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஜூன் 3 முதல் ஜூலை 7 வரை அவரது சர்க்கரை அளவு 26 முறை குறைந்துள்ளது என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாஜக தலைமையிலான மத்திய அரசும், துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவும் கேஜரிவாலின் உயிருடன் விளையாடுவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், திகார் சிறை நிர்வாகம், மத்திய அரசைக் கண்டித்தும், சிறையில் கேஜரிவாலுக்கு உரிய சிகிச்சை வழங்க வலியுறுத்தியும் இந்தியா கூட்டணி சார்பில் ஜூலை 30ஆம் தேதி ஜந்தர் மந்தரில் பேரணி நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
கலால் கொள்கை ஊழல் வழக்கில் கேஜரிவால் மார்ச் 21 அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் உச்ச நீதிமன்றத்தால் பிணை பெற்றுள்ளார்.
இருப்பினும், சிபிஐ தொடர்பான வழக்கில் அவர் தற்போது திகாரில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.