அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் 
இந்தியா

அமர்நாத்: இதுவரை 4.25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

இதுவரை 4.25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.

PTI

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இதுவரை 4.25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.

வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், குகைக் கோயிலைத் தரிசிக்க 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கொண்ட புதிய குழு இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணையுடன் 106 வாகனங்களில் 3,089 பேர் அடங்கிய 28வது குழு அதிகாலை 3.23க்கு பகவதி நகர் அடிப்படை முகாமிலிருந்து புறப்பட்டது.

இதில் 1,803 பக்தர்கள் பாரம்பரிய 48 கி.மீ பஹல்காம் வழியாகவும், 1,286 பேர் செங்குத்தான 14 கி.மி பால்டால் வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்

3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலில் இயற்கையாக உருவான பனி லிங்கத்திற்கு ஏற்கனவே 4.25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்தாண்டு 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசித்தனர்.

ஜூன் 28ஆம் தேதி முதல் ஜம்முவில் இருந்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​முதல் குழுவைக் கொடியசைத்துத் துவக்கி வைத்ததிலிருந்து, 3,11,493 பக்தர்கள் ஜம்மு அடிப்படை முகாமிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் உள்ள பால்டால் மற்றும் பஹல்காம் அடிப்படை முகாம்களிலிருந்து தொடங்கிய 52 நாள் யாத்திரை ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் நூலகரிடம் ஆபாசமாக நடந்து கொண்டவா் கைது

ப்ரண்ட்ஸ் டிரெய்லர்!

துரந்தர் டிரெய்லர்!

கோவை வருகை: தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி!

தில்லியைப் போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி? ஜம்மு-காஷ்மீரில் உஷார் நிலை!

SCROLL FOR NEXT