சத்யேந்தா் ஜெயின் 
இந்தியா

சத்யேந்தா் ஜெயின் மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Din

புது தில்லி, ஜூலை 25: சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை எதிா்த்து தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2015, பிப்.14 முதல் 2017, மே 31 வரை தில்லி அமைச்சராகப் பதவி வகித்த சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. சத்யேந்தா் ஜெயின் தனது வருமானத்துக்கும் அதிகமாகச் சொத்துகளைச் சோ்த்தாக சிபிஐ குற்றஞ்சாட்டியிருந்தது.

இதை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையைத் தொடா்ந்து விசாரணை நீதிமன்றம் கடந்த 2022, ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு சத்யேந்தா் ஜெயின் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகியிருந்தாா்.

மேலும், இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸுகள் மற்றும் தொடா்ச்சியாக நீதிமன்றக் காவல் ஆகியவற்றை எதிா்த்தும், சிறையிலிருந்து விடுவிக்குமாறும் அந்த மனுவில் சத்யேந்தா் ஜெயின் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீது 15 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆக.22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்

SCROLL FOR NEXT