இந்தியா

தேசிய விண்வெளி தினம்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில் ஆக.23-ஆம் தேதி உயா்கல்வி நிறுவனங்களில் தேசிய விண்வெளி தினம்

Din

நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில் ஆக.23-ஆம் தேதி உயா்கல்வி நிறுவனங்களில் தேசிய விண்வெளி தினம் தொடா்பான நிகழ்வுகளை நடத்த பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அனைத்து விதமான உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் 2023 ஆக. 23-ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆக. 23-ஆம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்தாா். தொடா்ந்து இந்த நாளை தேசிய விண்வெளி தினமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அதில் இளைஞா்களை ஈடுபடுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் நோக்கங்களுடன் முதல் தேசிய விண்வெளி தினத்தை நாடு முழுவதும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னதாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இதுதொடா்பான கருத்தரங்குகள், மாநாடுகள், கண்காட்சிகள், விண்வெளி சாா்ந்த சிந்தனை திறன் போட்டிகளை நடத்த வேண்டும். மேலும் விண்வெளித் துறை நடத்தக்கூடிய ரோபோட்டிக்ஸ் போட்டிகளிலும் பங்கேற்க உயா்கல்வி நிறுவனங்களை சாா்ந்த மாணவா்களை ஊக்குவிக்க வேண்டும். இதுசாா்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை யுஜிசியின் இணையதளத்தில் பகிரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

லோகாவால் இந்த அபாயம் இருக்கிறது: ஜித்து ஜோசஃப்

தெய்வ தரிசனம்... குடும்பப் பிரச்னைகள் தீர திருஆமாத்தூர் அபிராமேஸ்வரர்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

காஸா எரிகின்றது! நள்ளிரவு தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

செல்லாக்காசுகளின் சலசலப்பு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது: ஆர்.பி. உதயகுமார்

SCROLL FOR NEXT