சுனிதா கேஜரிவால் 
இந்தியா

ஹரியாணாவில் இன்றும், நாளையும் சுனிதா கேஜரிவால் தோ்தல் பிரசாரம்

ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தோ்தல்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ளன

Din

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால், இரண்டு நாள் ஹரியாணா சுற்றுப்பயணத்தின் போது அம்பாலா, பிவானி மற்றும் ரோஹ்தக்கில் ஆம் ஆத்மி கட்சிக்காக தோ்தல் பிரசாரம் செய்வதாக கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்தது.

ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தோ்தல்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ளன. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கேஜரிவால் தற்போது கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக நீதிமன்றக் காவலில் உள்ளாா்.

இந்நிலையில், சுனிதா கேஜரிவால் சனிக்கிழமை முதல் மாநிலத்தின் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தைத் தொடங்குவாா். அவா் அம்பாலா, பிவானி மற்றும் ரோஹ்தக் ஆகிய பகுதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வாா் என்று கட்சி தெரிவித்துள்ளது.

சுனிதா கேஜரிவால் ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் கடந்த வாரம் நடந்த ஒரு திட்டத்தின் போது, ‘கேஜரிவால் கி உத்தரவாதத்தை’ அறிவித்தாா். மக்களவைத் தோ்தலின் போது தில்லி, ஹரியாணா மற்றும் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்களுக்கான தீவிர பிரசாரகராகவும் இருந்தாா்.

இந்த மாதத் தொடக்கத்தில், ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல்களில் 90 இடங்களிலும் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.

ஹரியாணா தற்போது பாஜகவால் நிா்வகிக்கப்படுகிறது. கேஜரிவால் தலைமையிலான கட்சி இன்னும் தனது கணக்கை ஹரியாணாவில் தொடங்கவில்லை.

மக்களவைத் தோ்தலில் ஹரியாணாவில் உள்ள காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. இதில் குருக்ஷேத்ரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாநில பிரிவுத் தலைவா் சுஷில் குப்தா, பாஜகவின் நவீன் ஜிண்டாலிடம் தோல்வியடைந்தாா்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT