புது தில்லி: புது தில்லியில் நடைபெற்ற நீதி அயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதி ஆயோக் கூட்டத்தில், அவர் பேசிக்கொண்டிருக்கும்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது மிக மோசமானது என்று, எதிர்க்கட்சி தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது.
புது தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.
வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, மேற்கு வங்க மாநிலத்துக்குத் தேவையான நிதி குறித்து பேசிக்கொண்டிருக்கும்போதே, எனது மைக் துண்டிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். எதிர்கட்சி ஆளும் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிப்பதாகவும், அவர் கூறியிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி கருத்துத் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து மத்திய அரசு கூறுகையில், மம்தா பானர்ஜி கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், நீதி ஆயோக் கூட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது என்றும் கூறியிருடிககிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நீதி ஆயோக் திட்டத்தின் கூட்டத்தை பிரதமர் மோடி ஒரு டிரம்ஸ் வாசிப்பவர் போல நடத்திக்கொண்டிருக்கிறார் என்றும் காங்கிரஸ் விமரிசித்துள்ளது.
இன்று நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில், இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்திருந்த நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மட்டுமே பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.