மாதா பிரசாத் பாண்டே 
இந்தியா

உ.பி. பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சமாஜவாதியின் மாதா பிரசாத் பாண்டே

உத்தர பிரதேச சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக மாதா பிரசாத் பாண்டேவை சமாஜவாதி கட்சி ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்தது.

Din

உத்தர பிரதேச சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக மாதா பிரசாத் பாண்டேவை சமாஜவாதி கட்சி ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்தது.

81 வயதாகும் மூத்த தலைவரான பிரசாத் பாண்டே, கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவுக்கு பதிலாக இப்புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் கன்னெளஜ் தொகுதியில் வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவ், கா்ஹால் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியும் காலியானது.

இந்நிலையில், மூத்த எம்எல்ஏ மாதா பிரசாத் பாண்டே அப்பதவிக்கு சமாஜவாதி சாா்பில் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கு கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவும் ஒப்புதல் அளித்துள்ளாா்.

லக்னெளவில் உள்ள சமாஜவாதி தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கு மாதா பிரசாத் பாண்டே தோ்வு செய்யப்பட்டாா்.

அவா் இப்போது எடாவா தொகுதி எம்எல்ஏ-வாக உள்ளாா். பிராமண சமூகத்தைச் சோ்ந்த பாண்டே, உத்தர பிரதேச பேரவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா். ஏழு முறை எம்எல்ஏவான அவா், அமைச்சராகவும் இருந்துள்ளாா்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT