பிகாரில் இன்று(ஜூலை 29) பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் ‘பிகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலின்’ என்ஜின் இன்று காலை 10 மணியளவில் குதிராம் போஸ் பூசா ரயில் நிலையத்துக்கும் கர்ப்பூரி கிராம் ரயில் நிலையத்துக்கும் இடையே பயணித்துக் கொண்டிருக்கும்போது, தனியாகக் கழன்று சென்றுள்ளது.
இதையடுத்து ரயில் என்ஜின் மட்டும் தனியாக ரயில் பாதையில் பயணித்து சிறிது துரம் சென்றுள்ளது. இதன்காரணமாக, மீதமுள்ள ரயில் பெட்டிகள் நடு வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நல்வாய்ப்பாக ரயில் மிதமன வேகத்தில் இயக்கப்பட்டதால் ரயில் பெட்டிகள் எதுவும் தடம் புரளவில்லை.
இதுகுறித்த தகவல் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அருகாமையில் உள்ள குதிராம் போஸ் பூசா ரயில் நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிய வரவே, அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சுமார் 1 மணி நேரத்தில் ரயில் என்ஜின் பெட்டிகளுடன் பொருத்தப்பட்டு அதன்பின் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
ரயில்என்ஜின் பிரிந்து சென்றதற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.