மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றியபோது. 
இந்தியா

வரி தீவிரவாதத்தால் மக்கள் பாதிப்பு: ராகுல் காந்தி

அரசின் வரி தீவிரவாதத்தால் இந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

DIN

அரசின் வரி தீவிரவாதத்தால் இந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பேசுகையில், மகாபாரத்தில் அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கியது போல நாடும் தாமரை வியூகத்தில் சிக்கியுள்ளது. சக்கர வியூகத்தை துரோணர், அஸ்வத்தாமன் கட்டுப்படுத்தியது போல், மோடி, அமித்ஷா கட்டுப்படுத்துகின்றனர். பிரதமர் மட்டுமே அரசின் முக்கிய அமைப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

பாஜகவில் பிரதமர் என்றால் ஒருவர் தான், பாதுகாப்பு அமைச்சர் பிரதமர் ஆக நினைக்க முடியுமா?. பாஜக ஆட்சியல் விவசாயிகள், தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆளும் கட்சியில் உள்ள எனது நண்பர்கள் சிரித்தாலும் அவர்களும் அச்சத்தில் தான் உள்ளனர். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நாட்டில் வரி தீவிரவாதம் நிலவுகிறது. வரி தீவிரவாதத்தால் மக்களும் சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நுழைவுத் தேர்வு நெறிமுறை குறித்து பட்ஜெட்டில் ஒன்றும் அறிக்கப்படவில்லை. பணமதிப்பிழப்பால் வேலைவாய்ப்பில்லாத நிலை தொடர்கிறது. இளைஞர்களுக்கு பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. புதிதாக கொண்டுவரப்பட்ட இன்டர்ன்ஷிப் திட்டத்தால் பெரு நிறுவனங்கள்தான் பயன்பெறும். வேலையில்லா திண்டாட்டத்திற்கு இன்டர்ன் ஷிப் திட்டம் ஒரு பேண்ட் எய்ட் போன்றதுதான்.

நாடு முழுவதும் வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இது குறித்து பட்ஜெட்டில் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா?. குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை ஏன் இன்னும் அளிக்கவில்லை?. பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்னிவீர் திட்டத்தில் ஓய்வூதியம் தொடர்பாக பட்ஜெட்டில் எதுவும் இடம்பெறவில்லை. கரோனா சமயத்தில் கைத்தட்டுவதும், செல்போனில் டார்ச் அடிப்பதும் தான் இளைஞர்களுக்கு வழங்கும் வேலையா?.

ரயில்வே, விமான போக்குவரத்து துறைகளின் ஒப்பந்தங்கள் 2 பெரிய பணக்காரர்களிடம் ஒதுக்கப்பட்டுள்ளனர். பாஜக அரசின் சக்கர வியூகத்தை காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநில அரசுகள் உடைத்தெறிந்து வருகின்றன என்றார். அவையில் அம்பானி, அதானி என்ற பெயரை சொல்லக்கூடாது என மக்களவைத் தலைவர் கூறியதால் ஏ1, ஏ2 என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT