பாபா ராம்தேவ் 
இந்தியா

கரோனாவை குணமாக்கும் கரோனில் என்பதை நீக்குக: பாபா ராம்தேவ்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

கரோனாவை குணமாக்கும் கரோனில் என்பதை நீக்குமாறு பாபா ராம்தேவ்வுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிடிஐ

புது தில்லி: கரோனாவை, கரோனில் மருந்து குணமாக்கும் என்ற வாசத்தை நீக்குமாறு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு மருத்துவக் கழகத்தினர், கடந்த 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அடுத்த மூன்று நாள்களுக்குள் இது தொடர்பான அனைத்துப் பதிவுகள் மற்றும் விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவக் கழகத்தின் மனுவானது, பாபா ராம்தேவ், அவரது நெருங்கிய உதவியாளர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்பட்டதாகும்.

பதஞ்சலி விளம்பரத்தில், கரோனாவை கரோனில் மருந்து குணமாக்கும் என்று விளம்பரம் கொடுத்திருப்பததாகவும், இதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

8% வளா்ச்சி கண்ட இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை

தொடரை டிரா செய்யும் முனைப்பில் இந்தியா- இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்

3-ஆவது சுற்றில் ஸ்வெரெவ், ரூட்

லக்ஷயா சென், ரக்ஷிதா ஸ்ரீ 2-ஆவது சுற்றுக்குத் தகுதி

புலவயோ டெஸ்ட்: ஜிம்பாப்வே 149

SCROLL FOR NEXT