கேரளத்தில் இன்றும், நாளையும் துக்கம் அனுசரிப்பு!
கேரளத்தில் இன்றும் நாளையும் துக்கம் அனுசரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பைத் தொடர்ந்து 2 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுவதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால், வயநாட்டில் இன்று அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கை 85ஆகவும், நிலச்சரிவில் சிக்கிய 116 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து வயநாட்டின் அண்டை மாவட்டங்களான மலப்புரம், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய உள்மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரளத்தில் இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.