கோப்புப் படம் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலா? தேடுதல் வேட்டையில் ராணுவம்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாகத் தகவல் கிடைத்ததையடுத்து ரானுவத்தினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

DIN

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இரு பயங்கரவாதிகள் ஊடுருவியதாகக் கிடைத்தத் தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

சலம்புரா கிராமத்தில் கருப்பு உடையணிந்த இரு நபர்கள் ஆயுதங்களுடன் வலம் வரும் தகவல் கிடைத்தாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தகவல் கிடைத்தவுடன் ராஷ்டிரிய ரைஃபில்ஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வழிகாட்டுதலின் பேரில் காவல்துறையினருடன் இணைந்து நேற்று (ஜூலை 29) முதல் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் பங்காய் பகுதிக்கு நகர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், தற்போது வரை தேடுதலில் அவர்கள் இருக்கும் சரியான இடம் குறித்தத் தகவல்கள் தெரியவில்லை என கூறப்படுகிறது.

சுற்றியுள்ள வனப்பகுதிகள் மற்றும் கிராமங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிரத் தேடுதலில் இறங்கியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT