கோப்புப் படம் 
இந்தியா

கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்த முதல் மாநிலமானது உத்தரகண்ட்!

கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிப்பதற்கு ஒப்புதல் அளித்தது உத்தரகண்ட் அரசு

DIN

உத்தரகண்டில் கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.

உத்தரகண்டில் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற மாநில மாநில கூட்டுறவு அமைச்சர் டாக்டர். தன் சிங் ராவத்தின் முன்மொழிவுக்கு, அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் அடிப்படையில், உத்தரகண்டில் கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு மாவட்ட கூட்டுறவு சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மாநில அளவிலான கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்.

இந்த ஒதுக்கீடு குறித்து டாக்டர். தன் சிங் ராவத் கூறிவதாவது, ``பிரதமர் நரேந்திர மோடியின் 'கூட்டுறவு மூலம் செழிப்பு' என்ற மந்திரத்தின் மூலம், கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் 33 சதவிகித பங்களிப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

நாட்டில் இந்த செயல்பாட்டினை அறிமுகம் செய்த முதல் மாநிலம் உத்தரகண்ட் ஆகும். இந்த அறிவிப்பு பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.

இதன்மூலம், சமூகங்களில் பெண்களின் 33 சதவிகித பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுகிறது; பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தலைமைப் பண்பையும் ஊக்குவிக்கும்.

இது மற்ற மாநிலங்கள் பின்பற்ற ஒரு முன்மாதிரியாக இருக்கும். மேலும், கூட்டுறவு சங்கங்களில் ஆண்களின் ஆதிக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவர இயலும்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT