ஒடிசா மாநிலத்தின் பரதீப் துறைமுகத்தில் பண விவகாரம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சீன சரக்குக் கப்பலை துறைமுக அதிகாரிகள் சிறைப்பிடித்தனர்.
அட்மிரால்டி சட்டம் எனப்படும் கடல்சார் சட்டப்படி கடல்சார்ந்த உரிமைகோரல்களை அமலாக்குவது தொடர்பாக எந்தவொரு கப்பலின் உரிமை, கட்டுமானம், உடைமைகள், நிர்வாகம், செயல்பாடு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் கப்பலை சிறைப்பிடிக்கலாம் என கூறப்படுகிறது.
கப்பல் உரிமையாளருக்கும் கப்பலுக்கு மரைன் பெட்ரோல் அனுப்பிய நிறுவனத்துக்கும் இடையே பணம் வழங்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
கப்பலின் உரிமையாளர் ரூ.99.81 லட்சத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு செலுத்தத் தவறியதாக சரக்குகளை அனுப்பிய நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆவணங்களை சரிபார்த்த ஒடிசா உயர்நீதிமன்றம் கப்பலை சிறைபிடிக்கும் உத்தரவை திங்களன்று (ஜூலை 29) வழங்கியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கப்பல் துறைமுகத்திலேயே இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.