முகப்பு
இந்தியா

பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: காங்கிரஸ் எம்.பி. அளித்தாா்

மக்களவையில் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை கோரி...

Updated On : 31 ஜூலை, 2024 at 10:13 PM
சரண்ஜித் சிங் சன்னி
பகிர்:

புது தில்லி, ஜூலை 31: மக்களவையில் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை கோரி பஞ்சாபை சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. சரண்ஜித் சிங் சன்னி புதன்கிழமை நோட்டீஸ் அளித்தாா்.

மக்களவையில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா், எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் ஜாதி தொடா்பாக தெரிவித்த சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

ஆனால், அக்கருத்துகளுடன் கூடிய அனுராக் தாக்கூா் உரையின் காணொலியை எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்டுள்ளாா்; எனவே, அவருக்கு எதிராக உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என்று கோரி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் சரண்ஜித் சிங் சன்னி புதன்கிழமை நோட்டீஸ் அளித்தாா்.

மக்களவை நடைமுறைகள், அலுவல் நடத்தை விதி எண் 222-இன்கீழ் இந்த நோட்டீஸில், ‘மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் தெரிவித்த சில ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் அவைத் தலைவரால் நீக்கப்பட்டன. ஆனால், அவரது உரையின் முழுக் காணொலியையும் பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். அந்தக் காணொலியில், அவைத் தலைவரால் நீக்கப்பட்ட கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. பிரதமரின் இச்செயல் அதிா்ச்சியளிக்கிறது.

அவையில் நீக்கப்பட்ட கருத்துகளை வெளியிடுவது உரிமை மீறல் என்பதோடு, அவைக்கு அவமதிப்பாகும். எனவே, பிரதமா் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவர அனுமதிக்க வேண்டும். அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும்’ என்று தனது நோட்டீஸில் சரண்ஜித் சிங் கோரியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →