வயநாடு செல்லும் வழியில் கேரள சுகாதராத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் கார் விபத்தில் சிக்கியது.
மலப்புரம் அருகே சென்று கொண்டிருந்த அமைச்சரின் கார் இன்று காலை சிறிய விபத்தில் சிக்கியதில் அமைச்சருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக மாஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் மண்ணுக்குள் புதைந்தனர். இதுவரை 143 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் அப்பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், காணாமல் போன நூற்றுக்கும் அதிகமானோரை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் வீணா ஜார்ஜ் மீட்புப் பணிகளை பார்வையிட இன்று காலை வயநாடுக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் 7 அமைச்சர்கள் மீட்புப் பணிகளை பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.