கிரண் ரிஜிஜு 
இந்தியா

ராகுல் காந்தியின் சாதியைக் கேட்பதில் என்ன தவறு?: கிரண் ரிஜிஜூ கேள்வி!

ராகுல் காந்தியின் சாதியைக் குறித்து கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN

சாதி அடிப்படையில் நாட்டைப் பிரிக்க முயற்சிக்கும் ராகுல் காந்தியின் சாதி குறித்து கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக எம்பி அனுராக் தாகூர் மக்களவையில் நேற்று (ஜூலை 30) பேசுகையில் சாதி என்னவென்று தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கேட்கிறார்கள் என ராகுல் காந்தியைச் சுட்டும்படி பேசியதற்கு எதிர்கட்சிகள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ, ”காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அனைவரின் சாதி குறித்து கேள்வி எழுப்புகின்றனர். ஒருவரது சாதியைக் கேட்பதன் மூலம், நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.

ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, ​​அவர் அவர்களின் சாதியைக் கேட்கிறார், ஆயுதப்படை வீரர்களின் சாதியைக் கேட்கிறார், பாரத் ஜோடோ யாத்திரையின் போது மக்களின் சாதியைக் கேட்கிறார்.

மற்றவர்களின் சாதியை அவர் கேட்கலாம். ஆனால், அவர் சாதியை யாரும் கேட்கக் கூடாதா. அவரின் சாதியைக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. அகிலேஷ் யாதவ் ராகுல் காந்திக்கு ஆதரவளிக்கிறார். அவர்கள் என்ன இந்த நாட்டை, நாடாளுமன்றத்தைவிட மேலானவர்களா?” என்று கேள்வி எழுப்பினார்” என்றார்.

மேலும், ”வீதிகள் முதல் நாடாளுமன்றம் வரை காங்கிரஸ் வன்முறையைப் பரப்புகிறது. மக்களைப் பிளவுபடுத்தும் காங்கிரஸின் முயற்சியை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.” என்று கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ரிஜிஜூ, “நமது பிரதமர் ஒபிசி வகுப்பைச் சேர்ந்தவர். ஆனால், அவர் அனைத்து வகுப்பு மக்களையும் உயர்த்த உழைக்கிறார். அவர்கள் எப்போதும் ஒபிசி, எஸ்சி,எஸ்டி இடஒதுக்கீடுகளுக்கு எதிராகவே இருந்துள்ளனர். முன்னாள் பிரதமர்களான நேருவும் ராஜிவ் காந்தியும் இடஒதுக்கீடுகளுக்கு எதிராகவே இருந்தனர்” என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசுகையில், “70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தீர்கள். ஏன் நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT