இந்தியா

ஜார்க்கண்ட்: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்!

ஜார்க்கண்ட்டின் தும்காவில் கிராம மக்கள் 400-க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பதை புறக்கணித்துள்ளனர்.

DIN

ஜார்க்கண்டில் சனிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் 7 ஆவது கட்ட வாக்குப்பதிவை கிராம மக்கள் 400-க்கும் மேற்பட்டோர் புறக்கணித்துள்ளனர்.

தும்கா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியான பாக்துபி கிராமத்தில் ரயில்வேயின் நிலக்கரி குப்பை கிடங்கு கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, நிலக்கரிக்கிடங்கு கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாக்துபி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடி எண் 94இல் மொத்தம் 426 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தவில்லை.

மாலை 3 மணி நில்வரப்படி, அந்த வாக்குச்சாவடியில் மொத்தமுள்ள 430 வாக்காளர்களில், 4 வாக்காளர்கள் மட்டுமே தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

இதை கேள்விப்பட்டு அங்கு விரைந்த துணை கோட்ட அலுவலர் அஜய்குமார், கிராம மக்களிடம் ஆலோசனை நடத்தி, உயர் அதிகாரிகளிடம் பேசுவதாக உறுதியளித்தார். இருப்பினும், அவர்கள் வாக்களிக்க உடன்படவில்லை.

இதுகுறித்து கிராம நிர்வாகி லக்ஷ்மண் சோரன் கூறுகையில், ''நிலக்கரி கிடங்கு கட்டுவதை நிறுத்துவதாக துணை கோட்ட அலுவலர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால், நாங்கள் வாக்களிக்கச் செல்வோம் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தினோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு எந்த உறுதிமொழியும் வழங்கவில்லை''என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT