இந்தியா

கலால் வழக்கு: கவிதாவின் காவல் ஜூலை 3 வரை நீடிப்பு!

கவிதாவின் நீதிமன்றக் காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

தில்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 15-ஆம் தேதி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பிஆர்எஸ் தலைவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை மே 29 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றம் பிடிவாரண்டுகளை பிறப்பித்தது. மேலும் குற்றவாளிகளான இளவரசன், தாமோதர் மற்றும் அரவிந்த் சிங் ஆகிய 3 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அமலாக்கத்துறை விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்படாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டனர்.

கவிதாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா அவரது காவலை ஜூலை 3 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பணிகளில் 8.5 லட்சம் அதிகாரிகள்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளருக்கு அறிவிப்பு!

மாலத்தீவில்... ஆமிரா தஸ்தூர்!

முகமது சாலா 2 கோல்கள்: 2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வானது எகிப்து!

துள்ளல்... காவ்யா அறிவுமணி!

SCROLL FOR NEXT