காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா அபார வெற்றி!
காந்தி நகரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார் பாஜக வேட்பாளர் அமித் ஷா.
குஜராத் காந்திநகர் தொகுதியில் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அமித் ஷா வெற்றி பெற்றுள்ளார்.
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், எல்.கே.அத்வானி, வாஜ்பாய் போன்ற முன்னணி தலைவர்கள் வெற்றிபெற்ற தொகுதியான காந்திநகரில் பாஜக தலைமையில் களமிறங்கியுள்ள அமித்ஷா 10,10,972 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார். அதேசமயம், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சோனல் ராமன்பாய் படேல் 2,66,256 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.