மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மகன் கரண் பூஷண் சிங் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சமஜ்வாதி கட்சி பகத் ராமை விட 1,48,843 வாக்குகள் அதிகமாக பெற்றார்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷணுக்கு மக்களவையில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அவரது மகன் களமிறக்கப்பட்டார்.
இந்த வெற்றி தனது தந்தையின் 30 ஆண்டுகால கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. கைசர்கஞ்ச் மக்களுக்கு எனது நன்றி என கரண் பூஷண் சிங் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.