அப்துல் ரஷீத் ஷேக் கோப்புப் படங்கள்
இந்தியா

சிறையில் இருந்தவாறு வென்ற சுயேச்சை வேட்பாளர்!

லடாக் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறார்.

DIN

லடாக் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறார். இதேபோன்று காஷ்மீர், டாமன் டையூ தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

லடாக் மக்களவைத் தொகுதியில் இன்று (ஜுன் 4) காலை முதலே வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், சுயேட்சை வேட்பாளர் முகமது ஹனீஃபா 28,616 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இவர் 64,157 வாக்குகள் பெற்றுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் டிசெரிங் நம்க்யால் 35,541 வாக்குகளும், பாஜக வேட்பாளர் தாஷி காயல்சன் 30,643 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதேபோன்று காஷ்மீரின் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக் 1,95,126 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அவர் 4,33,213 வாக்குகள் பெற்றுள்ளார். இத்தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா, 2,38,087 வாக்குகள் பெற்றார்.

இதில் சுவாரசியம் என்னவென்றால், சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக் சிறையில் இருக்கிறார். சிறையில் இருந்தவாறு அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ஒமர் அப்துல்லா, தேர்தல் முடிவை ஏற்க வேண்டியது தவிர்க்க முடியாதது. வடக்கு காஷ்மீரில் ரஷீத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி அவரை சிறையில் இருந்து விடுவிக்கும் என்று நான் நம்பவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

மனதுக்கு குளிர்ச்சி... சாக்‌ஷி மலிக்!

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT