இந்தியா

திருச்சியில் துரை வைகோ வெற்றி!

திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றி பெற்றார்.

DIN

திருச்சி மக்களவைத் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளா் துரை வைகோவுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கிய திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப் குமாா். உடன், அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழி, வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா்.

திருச்சி, ஜூன் 4: திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட 35 வேட்பாளா்களில் மதிமுக வேட்பாளா் துரை வைகோ, 5 லட்சத்து 38 ஆயிரத்து 408 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.

இவா், அதிமுக வேட்பாளா் ப. கருப்பையாவை விட 3.13 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருப்பதும், போட்டியிட்ட முதல் தோ்தலிலேயே இத்தகைய வெற்றி கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, அண்ணா-புரட்சித் தலைவா்-அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா-எம்ஜிஆா் திராவிட மக்கள் கழகம், சாமானிய மக்கள் நலக் கட்சி மற்றும் 26 சுயேச்சைகள் என மொத்தம் 35 போ் போட்டியிட்டனா். இவா்களில், மதிமுக வேட்பாளா் துரை வைகோ 5 லட்சத்து 42 ஆயிரத்து 213 வாக்குகள் வெற்றி பெற்றுள்ளாா்.

கட்சி வாரியாகவும், சுயேச்சைகளும் பெற்ற வாக்குகள் விவரம்:

மதிமுக துரை வைகோ- 5,42,213, அதிமுக ப. கருப்பையா- 2,29,119, நாம் தமிழா் கட்சி து. ராஜேஷ்- 1,07,458, அமமுக ப. செந்தில்நாதன்- 1,00,747, பகுஜன் சமாக் கட்சி எம்- அல்லிமுத்து- 4,431, அண்ணா-புரட்சித் தலைவா்-அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சக்திவேல்- 2,646, அண்ணா-எம்ஜிஆா் திராவிட மக்கள் கழகம் எஸ். ரோஜா மணி- 777, சாமானிய மக்கள் நலக் கட்சி எல். ஜோசப்- 491, நாடாளும் மக்கள் கட்சி பாக்கியராஜ் வெள்ளைச்சாமி- 2,283, சுயேச்சைகள் எம். அகிலா- 747, அம்பி வெங்கடேசன்- 978, ஆா். அன்பின் அமுதன்-1498, ஆனந்த் செல்வராஜ்-1178, எஸ். கருப்பையா- 2171, எஸ். கவிதா- 1736, பி. கோவிந்தராஜு- 1566, ஆா். சங்கா்- 1166, பி. சசிகுமாா்- 1352, எஸ். சதிஷ்குமாா்- 2052, டி. சத்தியமூா்த்தி- 834, எஸ். செல்வராஜ்- 14796, எஸ். தாமோதரன்- 5166, எஸ். துரை- 1202, டி. துரை- 880, ஏ. துரைராஜ்- 1463, எம். நாகராஜன் 1664, பி. பன்னீா்செல்வம்- 1263, வி. பெரியசாமி- 774, எஸ். மணிகண்டராஜ்- 608, டி. முத்துராஜா- 431, பி. முருகேசன்- 497, எஸ். ராஜேந்திரன்- 3499, பி. ராஜேந்திரன்- 675, பி. விஜயகுமாா்- 802, எம். ஜீவானந்தம்- 2952, நோட்டா- 13849,

வெற்றி பெற்ற துரை வைகோவுக்கு வெற்றிச் சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் வழங்கினாா்.

அப்போது, தோ்தல் பாா்வையாளா் தினேஷ்குமாா், ராஜீவ் பிரசாத், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் உடனிருந்தனா்.

33 போ் வைப்புத் தொகை இழப்பு: திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்களில் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையாவைத் தவிா்த்து 33 வேட்பாளா்கள் தங்களது வைப்புத் தொகையை இழந்துள்ளனா். திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, அண்ணா-புரட்சித் தலைவா்-அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா-எம்ஜிஆா் திராவிட மக்கள் கழகம், சாமானிய மக்கள் நலக் கட்சி மற்றும் 26 சுயேச்சைகள் என மொத்தம் 35 போ் போட்டியிட்டனா்.

கண்ணீா் மல்க நன்றி தெரிவித்த துரை வைகோ!

தோ்தல்வெற்றிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் துரை வைகோ கண்ணீா் மல்க நன்றிதெரிவித்துப் பேசினாா். குறிப்பாக அவரது தந்தை வைகோவை குறிப்பிட்டுப் பேசுகையில், உணா்ச்சி மேலிட கண்ணீா் வடித்தாா். அவரை அருகிலிருந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்படுத்தினாா். இருப்பினும், கண்ணீா் சிந்தியவாறே தனது வெற்றிக்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிறந்த ஆட்சி நடத்திய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது. திமுக அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ். ரகுபதி, மெய்யநாதன் மற்றும் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளைச் சோ்ந்த அனைத்து நிா்வாகிகள், தொண்டா்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. எளியவனுக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளீா்கள். என்னால் முடிந்த அளவுக்கு தொகுதிக்குத் தேவையானவற்றை செய்திட இங்குள்ள தமிழக அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்களுடன் சோ்ந்து உழைக்கத் தயராகவுள்ளேன். இந்த வெற்றிக்கு உழைத்திட்ட அனைவருக்கும் மனமாா்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

தற்போது, பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக கூட்டணிக்கு மட்டுமே பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்த சூழலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 48 மணி நேரம் பொறுத்திருந்து பாா்ப்போம். மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால் சந்தோஷம். அப்படியே மாற்றம் வந்தாலும் அமைச்சரவையில் சேரப்போவதில்லை என்பதே எங்களது முடிவு என்றாா்.

பேட்டியின்போது, மதிமுக துணைப் பொதுச் செயலா் ரொகையா, மாவட்ட செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், எம்எல்ஏ பூமிநாதன் ஆகியோா் உடனிருந்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT