என்டிஏ கூட்டணி வெற்றி: மோடிக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து
அமராவதி: மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) வெற்றிக்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகா அமித் ஷா ஆகியோருக்கு சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
ஆந்திராவில் என்டிஏ கூட்டணியின் மாபெரும் வெற்றிக்குத் தெலுங்கு தேசம் கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமா் மோடியும், அமித் ஷாவும் வாழ்த்து தெரிவித்தனா்.
ஆந்திரத்தில் 25 தொகுதிகளுக்கான மக்களவைத் தோ்தல், 175 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இதில், என்டிஏ கூட்டணியில் உள்ள பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.