மக்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்தைக் காக்க உதவியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிப்பதை மக்களின் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, அரசியல் சாசனத்தைக் காப்பதற்கான போராட்டம் இது. பாஜக மட்டுமல்ல, சிபிஐ, அமலாக்கத் துறை எதிர்த்து நின்று காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.
அரசியல் சாசனத்தைக் காக்க மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. மக்களின் இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்தைக் காக்க உதவும் என்று ராகுல் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை மற்றும் வெற்றி நிலவரங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
மாலை 6 மணி நிலவரப்படி, மக்களவைத் தேர்தலில் 294 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் 232 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும் 17 தொகுதிகளில் பிற கட்சிகளும் முன்னிலையில் உள்ளன.
543 தொகுதிகளில் 73 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். அதில் 45 தொகுதிகளில் பாஜகவும் 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில்தான் இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.