ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதியில் நடிகை ரோஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.
நாடுமுழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திரத்தில் மக்களவையுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றதால், பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
ஆந்திரப் பேரவையில் ஆரம்பம் முதலே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி முன்னிலையில் நீடித்து வருகிறது. அக்கட்சி 130 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ராஜமுந்திரி, உண்டி ஆகிய பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 20 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் பாரதிய ஜனதா 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகை ரோஜா நகரி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். அவர் 39425 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் கலி பானு பிரகாஷ் 74633 வாக்குகள் பெற்றுள்ளார். இதன்மூலம் 35208 வாக்குகள் வித்தியாசத்தின் ரோஜா பின்னடைவில் உள்ளார். (2 மணி நிலவரம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.