இந்தியா

நவீன், நிதீஷ், சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!

தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதாக தகவல்

DIN

தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உடன் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சரத் பவார், தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக், மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாருடனும் சரத்பவார் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் சந்திர பாபு நாயுடு தலைமையிலான கட்சி 16 இடங்களிலும், நிதீஷ் குமார் தலைமையிலான கட்சி 14 இடங்களிலும் முன்னிலை வகித்து வரும் நிலையில், சரத் பவார் அவர்களுடன் பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 294 இடங்களிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. (பிற்பகல் 3.30 மணி நிலவரம்).

முன்னிலை நிலவரம் மட்டுமே வெளியாகிவரும் நிலையில், இன்னும் வெற்றிகள் முடிவு செய்யப்படவில்லை.

மக்களவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க 274 இடங்கள் தேவை என்பதால், இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார், சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக், நிதீஷ் குமார் ஆகியோருடன் தொலைப்பேசி வாயிலாக பேசியுள்ளார்.

எனினும், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், தான் இதுவரை யாருடனும் பேசவில்லை என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சரத் பவார் பேட்டியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அண்ணா எனும் பசுமாடு..! DMK எனும் காக்கா..!" அண்ணாமலை

சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டம்! அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரிக்கை!

”விஜய்யிடம் முதலில் என்ஜின் இருக்கா?” தவெகவை விமர்சித்த அண்ணாமலை

அண்ணாவின் நினைவுநாள்! எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

உச்ச நீதிமன்றத்தில் நாளை மமதா பானர்ஜி வாதிடுவார்!

SCROLL FOR NEXT