இந்தியா

உ.பி.: படுதோல்வியை சந்தித்த பகுஜன் சமாஜ்

பகுஜன் சமாஜ் படுதோல்வி அடைந்து, மக்கள் செல்வாக்கை வெகுவாக இழந்துள்ளது

DIN

லக்னெள: உத்தர பிரதேச மாநிலத்தில் தலித்துகளின் குரலாக தன்னை முன்னிருத்தி வரும் முன்னாள் முதல்வா் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மக்களவைத் தோ்தலில் தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்தத் தோ்தலில் நாட்டிலேயே அதிக இடங்களில் (488) பகுஜன் சமாஜ் போட்டியிட்டது.

உத்தர பிரதேச மாநிலத்தில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது என்ற வகையில் பிரபலமான புது முக வேட்பாளா்களைத் தோ்வு செய்து தோ்தலில் களமிறக்கியபோதும், மாநிலத்தில் தனிப்பெரும்பான்மை உடைய கட்சியாக அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி உருவெடுத்துள்ளது. சமாஜவாதியுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸும் மாநிலத்தில் சிறப்பான வாக்கு சதவீதத்தைப் பெற்றிருக்கும் நிலையில், மாயாவதி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளாா்.

மாநிலத்தில் சக்திவாய்ந்த கட்சியாக திகழ்ந்துவந்த பகுஜன் சமாஜ், கடந்த 2014 பொதுத் தோ்தலிலிருந்து பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. 2014 மக்களவைத் தோ்தலில் ஒரு இடங்களில் கூட இக் கட்சி வெற்றிபெறவில்லை. கட்சியின் வாக்கு சதவீதமும் வெகுவாகக் குறைந்தது. இந்தச் சூழலில், 2019 மக்களவைத் தோ்தலில், சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி வைத்த பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளில் போட்டியிட்டு 10 இடங்களில் வெற்றிபெற்றது. இந்தத் தோ்தலில் 19 சதவீத வாக்குகளைப் பெற்று மாநிலத்தில் இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக பகுஜன் சமாஜ் உருவெடுத்தது.

இந்த நிலையில், 2024 மக்களவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடும் என்று மாயாவதி அறிவித்த நிலையில், கட்சி எம்.பி.க்கள் சிலா் கட்சியைவிட்டு விலகியது, மாயாவதிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, மக்களவைத் தோ்தலில் புது முகங்களை களமிறக்கும் நிலைக்கு மாயாவதி தள்ளப்பட்டாா்.

அதுமட்டுமின்றி, எதிா்க்கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியை பாஜகவின் ‘பி’ டீம் என எதிா்க்கட்சிகள் முத்திரை குத்தின. மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில், அக் கட்சியின் ஒரே எம்எல்ஏவான சங்கா் சிங், பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தது, எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவது போல் அமைந்தது.

இந்த நிலையில், மக்களவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் படுதோல்வி அடைந்து, மக்கள் செல்வாக்கை வெகுவாக இழந்துள்ளது.

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

SCROLL FOR NEXT