மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை எட்டாதது வருத்தம் அளிப்பதாக கர்நாடக மாநில அமைச்சர் சி.டி. ரவி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜுன் 4) எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் கர்நாடகத்தில் இது தொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த சி.டி. ரவி, மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக பல இடங்களில் முன்னிலையில் நீடித்து வருகிறது. எனினும் 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற இலக்கு எட்டப்படாதது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால், கர்நாடகத்தில் நாங்கள் முதலிடத்தில் இருக்கிறோம். இது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.
கர்நாடகத்தில் கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலையில் நீடித்து வருகிறது. ஹவேரி தொகுதியில் பசவராஜ் பொம்மை 43513 வாக்குகள் வித்தியாசத்திலும், தார்வாட் தொகுதியில் பிரஹலாத் ஜோஷி 97324 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஒரு இடத்தில் முன்னிலையில் நீடிக்கிறது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. (இவை மாலை 7 மணி நிலவரம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.