அரவிந்த் கேஜரிவால் கோப்புப் படம்
இந்தியா

தேர்தலுக்குப் பிறகு... எம்.பியுடன் சென்று கேஜரிவாலை சந்தித்த மனைவி சுனிதா!

முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அவரின் மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா ஆகியோர் திகார் சிறையில் சென்று இன்று (ஜூன் 5) சந்தித்தனர்.

DIN

முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அவரின் மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா ஆகியோர் திகார் சிறையில் சென்று இன்று (ஜூன் 5) சந்தித்தனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு முதல்முறையாக கேஜரிவாலை சந்தித்தார் சுனிதா கேஜரிவால். தில்லியில் அனைத்து தொகுதியிலும் ஆம் ஆத்மி தோல்வி அடைந்த நிலையில், எம்.பி. ராகவ் சத்தாவும் நேரில் சென்று சந்தித்தார்.

திகார் சிறை விதிமுறைகளின்படி இன்று பிற்பகல் அரை மணிநேரம் குடும்பத்தாரை சந்திப்பதற்கு கேஜரிவாலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது சுனிதா கேஜரிவாலும், ராகவ் சத்தாவும் கேஜரிவாலை சென்று சந்தித்தனர்.

திகார் சிறை விதிமுறைகளின்படி வாரத்திற்கு இருமுறை பார்வையாளர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படும். மேலும், குடும்பத்தினருடன் தினமும் சில நிமிடங்கள் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதிக்கப்படும்.

சிறையில் இருந்தவாறு மக்களவைத் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சி வாயிலாக கேஜரிவால் தெரிந்துகொண்டதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சர்க்கரை நோயாளி என்பதால் நாள்தோறும் மருத்துவர்கள் மூலம் இருமுரை இன்சுலீன் ஊசிகள் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

இதனிடையே தனது மனைவி மற்றும் எம்.பி. ராகவ் சத்தாவை பார்வையாளர்கள் நேரத்தில் கேஜரிவால் நேரில் சந்தித்து பேசினார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு முதல்முறை நடைபெற்ற இந்த சந்திப்பில் முழு கள நிலவரத்தையும் அவர்கள் கேஜரிவாலிடம் பகிர்ந்துகொண்டதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலை / இரவு உணவைத் தவிர்த்தால் உடல் எடை குறையுமா? - நம்பிக்கையும் உண்மையும்

கூலிக்கு யு/ஏ சான்றிதழ் கோரிய வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 21 நக்சல்கள் சரண்!

ஜீத்து ஜோசப் உடன் ஷேன் நிகம்... மிரட்டும் முதல்பார்வை போஸ்டர்!

ஒருதலைக் காதல்! ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மாணவர்!

SCROLL FOR NEXT