கோப்புப் படம் 
இந்தியா

இந்தியா கூட்டணி ஆலோசனையில் மம்தா, தாக்கரே செல்லவில்லை

இந்தியா கூட்டணி ஆலோசனையில் சிவசேனை தலைவரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் செல்லவில்லை

DIN

இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் மம்தா பானர்ஜி இருவரும் பங்கேற்க மாட்டார்கள் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன.

புதுதில்லியில் இன்று (ஜூன் 5) மாலை 6 மணியளவில், இந்தியா கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் சந்தித்து ஆலோசிக்கவுள்ளனர். மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை செய்யவுள்ளனர். ஒருங்கிணைந்த ஜனதா தளம் கட்சித்தலைவர் நிதீஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரையும் ஆட்சியமைக்க அழைப்பதா? இல்லையா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சரத் பவார், மு.க.ஸ்டாலின், சம்பாய் சோரன், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

எனினும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்கவில்லை. இருப்பினும் சிவசேனை மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் சார்பாக கட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT