மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மோடி தோற்கடித்தார்.
ஆனால், கடந்த 2019 தேர்தலில் மோடி 4.8 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார்.
இவர் தோற்கடித்த அஜய் ராயும் ஒரு மரியாதையான தோல்வியையே சந்தித்துள்ளார். இவர் இரண்டு சாதனைகளையும் படைத்துள்ளார். ஒன்று, கடந்த மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்ற பெறாமல் தடுத்ததோடு, மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற தகவலையும் உருவாக்கிவிட்டார்.
இது வெறும் வாக்குவித்தியாசம் பற்றியது மட்டுமல்ல..
கடந்த தேர்தலை விட 60 ஆயிரம் வாக்குகள் மோடிக்குக் குறைவாகவே கிட்டியிருக்கிறது. அதேவேளையில் இந்த தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் அதிகரித்துள்ளது. எனவே, இவரது வாக்கு வங்கியானது 63 சதவீதத்திலிருந்து 54 சதவீதமாக சரிந்திருப்பதுதான் தகவல்.
2014ஆம் ஆண்டு மோடி 6,12,970 வாக்குகளை பெற்ற நிலையில், அஜய் ராய் 4,60,457 வாக்குகளை பெற்றிருந்தார்.
இந்த 2024 மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முதல் மூன்று சுற்றுகள் முடிந்திருந்தபோது, பிரதமர் மோடி 6000 வாக்குகள் பின்தங்கியிருந்தார். பிரதமர் மோடி பின்னடைவு என்ற அச்சத்தையும் பாஜகவுக்கு ஏற்படுத்திவிட்டார் அஜய். ஆனால், அதன்பிறகு மோடி முன்னிலைக்கு வந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை மோடியே முன்னிலையில் இருந்தார்.
கடந்த 2014 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் நான்காகப் பிரிந்ததும், 2019 தேர்தலில் இரண்டாகப் பிரிந்ததும், ஆனால், 2024ல் இது பிரியாமல் நேரடியாக காங்கிரஸ் கட்சிக்கு விழுந்ததும்தான் காரணம் என கூறப்படுகிறது.
ஆனால், மோடிக்கு 2019ல் கிடைத்த வாக்குகள் இப்போது குறைந்தது ஏன்? என்ற கேள்வி அப்படியேதான் இருக்கிறது. இதற்கு விடைகான, மாநில பாஜக தலைவர்கள் ஒன்றுகூடி பல்வேறு விஷயங்களை ஆராயவிருக்கிறார்களாம்.
தோல்வியே அடைந்தாலும், அஜய் ராய் என்னவோ மகிழ்ச்சி தான் தெரிவித்திருக்கிறார். தன் மீது வாரணாசி மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறார். இவ்வளவு வாக்குகளை அளித்த மக்களுக்கு நிச்சயம் இந்தியா கூட்டண நன்றியுடன் இருக்கும் என்றும் கூறுகிறார்.
பின்னடைவு என்ற பயத்தைக் காட்டியதோடு, வாக்கு வித்தியாசத்தில் வீழ்ச்சியையும் கொடுத்து வாரணாசி தொகுதி பிரதமர் மோடிக்கு, ஏதோ ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது. நிச்சயம் தனது தொகுதி மக்களின் குறைகளை பிரதமர் மோடி காதுகொடுத்துக் கேட்பார் என்றும் நம்பப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.