துபையிலிருந்து பயணம் செய்தவர் தங்கத்தினைக் கடத்தி வந்ததனால் புனே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவின் புனே சர்வதேச விமான நிலையத்தில், விமானத்தின் இருக்கையின்கீழ் மறைத்து வைத்திருந்த 78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க பேஸ்டை பறிமுதல் செய்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, ”கைது செய்யப்பட்ட பயணி பயணம் செய்வதற்குமுன் விமான நிலையத்தில் செய்யப்பட்ட சோதனையில் சந்தேகமடையக் கூடிய பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் பயணத்தின்போது பயணியின் நடத்தை மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால், அவர் எதையும் மறைத்து வைத்திருக்கிறாரா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அவருடைய பதில்கள் மேலும் சந்தேகமடையச் செய்ததால், அவரது இருக்கையில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது, அவர் அமர்ந்திருந்த இருக்கையின்கீழ் ஒரு குழாயில், ரூ.78 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் பாக்கெட் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. " என்று கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.