ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி, இன்று பாஜக எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
கர்னால் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்வர் சைனி தனது முக்கிய போட்டியாளரான காங்கிரஸின் தர்லோச்சன் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டார். இந்த நிலையில் கர்னால் சட்டமன்றத் தொகுதியில் சுமார் 13,668 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் நயாப் சைனி வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கர்னால் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நயாப் சையனிக்கு அவைத் தலைவர் கியான் சந்த் குப்தா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மனோகர் லால் கட்டாருக்கு பதிலாக குருக்ஷேத்ர எம்பியான நயாப் சைனி கடந்த மார்ச் 12-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.
கர்னால் சட்டமன்ற இடைத்தேர்தலுடன், மாநிலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.