dot com
இந்தியா

"பஞ்சாபில் பயங்கரவாதத்தை எவ்வாறு கையாள்வது?": கங்கனா எக்ஸ் பதிவு

சண்டீகரில் தாக்கப்பட்டதாக பாஜக எம்.பி கங்கனா எக்ஸ் பதிவு

DIN

சண்டீகர் விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை பெண் காவலர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கங்கனா ரணாவத் விடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில் கங்கனா ரணாவத், "வணக்கம் நண்பர்களே! ஊடகங்கள் மற்றும் எனது நலவிரும்பிகளிடமிருந்து எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். சண்டீகர் விமான நிலையத்தில் இன்று நடந்த பாதுகாப்பு சோதனைக்கு பிறகு நான் புறப்பட்டபோது, சிஐஎஸ்எஃப் காவலர் என் முகத்தில் அறைந்தார். ஏன் அவ்வாறு செய்தார் என்று நான் அவரிடம் கேட்டபோது, விவசாயிகளின் போராட்டங்களை அவர் ஆதரிப்பதாக என்னிடம் கூறினார். ஆனால் எனது கவலை என்னவென்றால், பஞ்சாபில் பயங்கரவாதத்தை எவ்வாறு கையாள்வது?” என்று பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் தில்லி செல்வதற்காக, சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு, விமானத்தில் ஏறுமிடத்தில் சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் தன்னை அறைந்ததாகக் கூறி, தில்லி வந்தடைந்த கங்கனா சிஐஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் நினா சிங்கிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT