முகப்பு
இந்தியா

காரில் உயிரிழந்த நபர்: தீயிட்டுக்கொள்ள முயற்சியா?

தில்லியில் 34 வயது நபர் காரில் உயிரிழப்பு: தீப்பற்றிய காட்சி சிசிடிவியில் பதிவாகியது

Updated On : 6 ஜூன், 2024 at 4:46 PM
representative
பகிர்:

தில்லி நேரு பிளேஸ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 34 வயது நபரின் உடல் வியாழக்கிழமை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணையில் உயிரிழந்த மனிதர் காருக்குள்ளேயே தன்னை தானே தீ வைத்துக்கொள்ள முயற்சித்ததாக தெரிகிறது. தீ வாகனத்துக்குள் முழுமையாக பற்றாதபோதும் அதீத அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறலால் அவரது நாசித்துவாரங்களில் இருந்து இரத்தம் வழிந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த துருவ் மகாஜன், லாஜ்பத் நாகர் பகுதி தயானந்த் காலனியை சேர்ந்தவர் என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

Advertisement

மக்கள் திரள் நடமாடக் கூடிய நேரு பிளேஸ் பகுதியில் வியாழக்கிழமை காலை 9.40 மணிக்கு காவலர்களுக்கு வந்த அழைப்பின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவலர்கள், காரில் ஒருவர் மயங்கியிருப்பதை கண்டுள்ளனர். அவரது மூக்கு மற்றும் உடலில் ரத்தக் கசிவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

காரின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர். காரின் உள்புறத்தில் பெட்ரோல் மணம் வந்துள்ளது. உரசப்பட்ட தீக்குச்சியும் நெளிக்கப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டிலும் காருக்குள் கிடந்துள்ளன.

அதிகாலை 3.30 மணி போல அங்கு வந்த காரில் உள்புறம் திடீரென தீப்பற்றும் காட்சி அருகிலுள்ள சிசிடிவில் பதிவாகியுள்ளது. ஒரு நிமிடத்தில் தீ அணைந்துள்ளது.

மகாஜனின் சகோதரி பூர்வி மகாஜனிடம் காவலர்கள் நடத்திய விசாரணையில், மகாஜன் கடும் கடன் நெருக்கடியில் இருந்ததாகவும் அதனாலேயே இந்த முடிவு எடுத்திருக்கலாமெனவும் தெரிவித்துள்ளார்.

உடற்கூராய்வுக்காக அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவனைக்கு அனுப்பப்பட்டதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை டிசிபி ராஜேஷ் தியோ தெரிவித்துள்ளார்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.