இந்தியா

மக்களவையில் 280 பேர் புதியவர்கள்!

2024 தேர்தலில் வெற்றிபெற்ற 280 எம்.பி.க்கள் முதல்முறையாக மக்களவைக்குச் செல்லவுள்ளனர்.

DIN

2019 ஆம் ஆண்டு 267 புதிய எம்பிக்கள் மக்களவைக்குச் சென்ற நிலையில், 18 ஆவது மக்களவைக்கு 280 எம்பிக்கள் முதல்முறையாக செல்லவுள்ளனர். அவர்களில் ஏற்கனவே எம்பிக்களாக பதவியில் உள்ள 263 பேர் மீண்டும் தேர்வாகியுள்ளனர். மேலும், 16 பேர் மாநிலங்களவையில் எம்பிக்களாக இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 8 எம்பிக்கள் தாங்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளை மாற்றியுள்ளனர்.

ஒருவர்(ராகுல் காந்தி) மட்டும் ஒரே நேரத்தில் ரே பரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளார்.

மேலும், 9 பேர் முந்தைய கட்சியில் இருந்து விலகி, வேறு கட்சியில் சேர்ந்தும், 8 பேர் முந்தைய கட்சியில் இருந்து பிரிந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றியை பதிவு செய்துள்ளனர்

போட்டியிட்ட 52 மத்திய அமைச்சர்களில் 35 பேர் மீண்டும் வெற்றிபெற்றுள்ளனர்.

மக்களவையில் பாரதிய ஜனதா கட்சி 240 இடங்களில் வெற்றிபெற்று பெரிய கட்சியாகவும், இந்திய தேசிய காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றிபெற்று 2 ஆவது இடத்தையும், சமாஜ்வாதி கட்சி 37 தொகுதியில் வெற்றிபெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT