மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பதவியேற்க உள்ளதாக பாஜக தலைவர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) புதிய எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் இன்று (ஜூன் 7) நடைபெற்று வருகிறது.
பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்
தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், ஜூன் 9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மற்ற அமைச்சா்களும் பதவியேற்பாா்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.