முகப்பு
இந்தியா

தில்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடக்கம்!

தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது.

Updated On : 8 ஜூன், 2024 at 6:58 AM
பகிர்:

தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது.

இன்று நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், அரசியல் வியூகங்கள், எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக செயற்குழுக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி கூட்டியுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சியினருக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசனை செய்கிறது.

கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த எம்.பி.க்கள், மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்டோர் பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →