பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எலான் !
மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்ற பிரதமா் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு
இந்தியாபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எலான் !
மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்ற பிரதமா் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு
மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக வெற்றி பெற்ற பிரதமா் நரேந்திர மோடிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்து, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் எலான் மஸ்க், உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமா் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளும், இந்தியாவில் முதிலீடு செய்வதற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா, சீனா, சிங்கப்பூா், இஸ்ரேல், ஈரான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவா்களும் வாழ்த்து தெரிவித்தனா். இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, மியான்மா் உள்ளிட்ட அண்டை நாட்டுத் தலைவா்களும் பிரதமா் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனா்.
இதற்கு முன்னதாக, எலான் மஸ்க் ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 22 வரை இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடைசிநேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது.
"எதிர்பாராவிதமான பணிகளின் காரணமாக தங்களால் இம்முறை வருகை புரிய இயலவில்லை; ஆனால் இந்தாண்டின் பிற்பகுதியில் வரவிருக்கிறேன்" என்று எலான் மஸ்க் கூறியிருந்தார். ஆனால் இன்றுவரையில், இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்கிற்கான தனது திட்டங்களை மஸ்க் அறிவிக்கவில்லை.
இந்தப் பயணத்தின் போது எலான் மஸ்க் பெரிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும், அதன்மூலம் சுமார் 2-3 பில்லியன் டாலர் மின்சார வாகன உற்பத்தி வசதி மற்றும் நாட்டில் சில ஸ்டார்லிங்க் தொடர்பான முன்னேற்றங்கள் அடையலாம் என்றும், புதுதில்லியில் பல ஸ்டார்ட்அப்களைச் சேர்ந்த நிர்வாகிகளை அவர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.