கோப்புப் படம் 
இந்தியா

”குற்றவாளிகள் அனைவரும் ஒரு காரணத்தினைக் கொண்டிருப்பர்” : கங்கனா

கங்கனாவைத் தாக்கிய காவலரை, பலரும் பாராட்டுவதை எதிர்த்து கங்கனா எக்ஸ் பதிவு

DIN

சண்டீகர் விமான நிலையத்தில் தன்னை அறைந்த சிஐஎச்எஃப் காவலரைப் பாராட்டி, பலரும் கருத்து தெரிவித்தது குறித்து கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கங்கனா தனது எக்ஸ் பதிவில், "ஒவ்வொரு பாலியல் துன்புறுத்தல் குற்றவாளி, கொலையாளி, திருடர் என அனைவரும் குற்றத்தைச் செய்ததற்கான உணர்ச்சி, உடல், உளவியல் அல்லது பணம்சார்ந்த காரணங்களைக் கொண்டுள்ளனர். எந்தக் குற்றமும் ஒரு காரணமின்றி நடக்காது. இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். நீங்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்தால், குற்றவாளிகளுக்கு அது ஒரு உந்துதலாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் தில்லி செல்வதற்காக, சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு, விமானத்தில் ஏறுமிடத்தில் சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் தன்னை அறைந்ததாகக் கூறி, தில்லி வந்தடைந்த கங்கனா சிஐஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் நினா சிங்கிடம் புகார் அளித்துள்ளார். விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா முன்பு கூறிய கருத்துக்களால் குல்விந்தர் கவுர் அதிருப்தி அடைந்திருந்ததால், அவர் கங்கனா ரணாவத்தை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT