கோப்புப் படம்
இந்தியா

இந்தியா மட்டுமல்ல; தெற்காசியாவுக்கே உரியவர் மோடி: தொழிலதிபர் சஜித் தரார்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலை, வெற்றிகரமாக இந்திய மக்கள் நடத்தியுள்ளதாக சஜித் தரார் புகழாரம்

DIN

பாகிஸ்தான் - அமெரிக்கத் தொழிலதிபர் சஜித் தரார் பேட்டியொன்றில், ”பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெற்காசியாவையும் வழிநடத்தக் கூடியவர்” எனக் கூறியுள்ளார்.

தொழிலதிபர் சஜித் தரார் அளித்த பேட்டியில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலை அமைதியாகவும், வெற்றிகரமாகவும் இந்திய மக்கள் நடத்தியுள்ளனர். பல கட்சிகள் அரசியலமைப்பை சீர்குலைப்பதைத் தடுப்பதற்கு, மோடியின் தலைமை அவசியம் என்று நான் முன்பே கூறியுள்ளேன். மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவதால் பாகிஸ்தான் மக்களும், இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறார்கள். மோடியின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கிறேன்; ஆனால், இதுவரை அவரிடமிருந்து எந்த வாழ்த்துச் செய்தியும் வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. இந்தியாவைப் போலவே, பாகிஸ்தானுக்கும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளைக் கையாள வலுவான தலைமை தேவை. பிரிக்ஸ் மற்றும் ஜி20 போன்ற பல்வேறு சர்வதேச மாநாடுகளைக் கையாண்ட ஒரு அனுபவமிக்க தலைவர் மோடி. மோடியின் தொடர்ச்சியான தலைமை, இந்தியாவை அதிக பொருளாதார மற்றும் முன்னுதாரண அரசியலை நோக்கி வழிநடத்த உதவும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வர்த்தகம் மேற்கொள்வதே தீர்வாகும். தயாரிப்புகள் மற்றும் கலாச்சாரங்கள் பரிமாறிக்கொள்ளும்போது, தவறான புரிதல்கள் தீர்க்கப்படும். இந்தியாவின் ஜனநாயகம் அமெரிக்காவை விட வலுவானது. மோடி அரசியலமைப்புச் சட்டத்தைத் தொட்டு வணங்கியபோது, ஜனநாயகத்தின் மீதான அவரது உறுதிப்பாட்டை வெளிக்காட்டியது” என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

வசீகரத்தின் உறைவிடம்... ஜொனிதா காந்தி!

சுவர் இருப்பின் சித்திரம்... நிகிதா ஷர்மா!

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

SCROLL FOR NEXT