இந்தியா

ஐஐடி நுழைவுத் தேர்வு: ஜேஇஇ முடிவுகள் வெளியீடு!

DIN

ஐஐடி நுழைவுத் தேர்வான ஜேஇஇயின் அட்வான்ஸ் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மே 26ல் நடைபெற்ற ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வை 1.80 லட்சம் பேர் எழுதிய நிலையில் மொத்தம் 48,248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

jeeadv.ac.in என்ற இணையதளத்தில் தேர்வின் முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

என்ஐடி, ஐஐடியில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ தோ்வானது ஜேஇஇ-முதல்நிலை (மெயின்), ஜேஇஇ-முதன்மை (அட்வான்ஸ்) என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

முதல்நிலைத் தோ்வு என்டிஏ (தேசிய தோ்வு முகமை) சாா்பிலும், முதன்மைத் தோ்வு ஏதாவது ஒரு ஐஐடி சாா்பிலும் நடத்தப்படும்.

ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT