பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மத்திய கேபினட் அமைச்சர்கள்
நரேந்திர மோடிக்கு அணுசக்தி, விண்வெளித் துறை, பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்
ஜெ.பி. நட்டாவுக்கு சுகாதாரத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத் துறையும், அமித் ஷாவுக்கு உள் துறை பொறுப்பும் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு மின்சாரத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் செளஹானுக்கு வேளாண் துறை வழங்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதின் கட்காரி - சாலை போக்குவரத்துத் துறை
தர்மேந்திர பிரதான் - கல்வித் துறை
சி.ஆர் பாட்டீல் - நீர்வளத் துறை
பியூஷ் கோயல் - வர்த்தகம் மற்றும் தொழில் துறை
ஜெய்சங்கர் - வெளியுறவுத் துறை
கஜேந்திர ஷெகாவத் - சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை
கிரண் ரிஜிஜூ - நாடாளுமன்ற விவகாரத் துறை
ஹெச்.டி. குமாரசாமி - உருக்கு மற்றும் கனரக தொழில் துறை
ஜித்தன் ராம் மாஞ்சி - சிறு, குறு, நடுத்தர தொழில் துறை
ராஜிவ் ரஞ்சன் சிங் - பஞ்சாயத்து மற்றும் விலங்குகள் நலத் துறை
சர்பானந்த சோனோவால் - துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை
சிராக் பாஸ்வான் - உணவு பதப்படுத்துதல் துறை
வீரேந்திர குமார் - சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை
ராம்மோகன் நாயுடு - விமான போக்குவரத்துத் துறை
பிரஹலாத் ஜோஷி - நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை
ஜுவல் ஓரம் - பழங்குடியினர் நலத் துறை
கிரிராஜ் சிங் - ஜவுளித் துறை
அஸ்வினி வைஷ்ணவ் - ரயில்வேத் துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை
ஜோதிராதித்ய சிந்தியா - தகவல் தொடர்புத் துறை, வடகிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சர்
பூபேந்தர் யாதவ் - சுற்றுச்சூழல் நலத் துறை
அன்னபூர்ணா தேவி - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
ஹர்தீப் சிங் புரி - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
மன்சுக் மாண்டவியா - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, விளையாட்டுத் துறை
கிஷண் ரெட்டி - நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை
இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)
ராவ் இந்திரஜித் சிங் - புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை
ஜிதேந்தர் சிங் - அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை
அர்ஜூன் ராம் மேக்வால் - சட்டம் மற்றும் நீதித் துறை
ஜாதவ் பிரதாப்ராவ் - குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை
ஜெயந்த் செளத்ரி - கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்
மத்திய இணை அமைச்சர்கள்
ஜிதின் பிரசாடா - தகவல் தொழில் நுட்பம்
ஸ்ரீபாத் யெஸோ நாயக் - மின்சாரத் துறை
பங்கஜ் செளத்ரி - நிதித் துறை
கிருஷ்ணன் பால் - கூட்டுறவுத் துறை
ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மற்றும் மேம்பாடு
நித்யானந்த் ராய் - உள் துறை
அனுபிரியா பட்டேல் - சுகாதாரம், ரசாயனம் மற்றும் உரத் துறை
சோமன்னா - நீர்வளத் துறை, ரயில்வே துறை
சந்திரசேகர் பெம்மாசானி - தகவல் தொடர்பு, ஊரக வளர்ச்சித் துறை
எஸ்.பி. சிங் பாகெல் - மீன்பிடி, கால்நடை பராமரிப்பு, கால்நடை அமைச்சகம்
ஷோபா கரந்த்லாஜே - சிறு, குறு, நடுத்தர தொழில் துறை, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு
கீர்த்திவர்தன் சிங் - வெளியுறவுத் துறை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால மாற்ற அமைச்சகம்
பி.எல். வர்மா - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்
சாந்தனு தாக்குர் - துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழித் துறை
சுரேஷ் கோபி - பெட்ரோலியம் எரிவாயுத் துறை
எல். முருகன் - தகவல் ஒலிபரப்புத் துறை
அஜய் தாம்தா - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை
பண்டி சஞ்சய் குமார் - உள் துறை
கமலேஷ் பாஸ்வான் - ஊரக வளர்ச்சித் துறை
பாகிராஜ் செளத்ரி - வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை
சதீஷ் சந்திர துபே - நிலக்கரி மற்றும் சுரங்கங்கள்
சஞ்சய் சேத் - பாதுகாப்புத் துறை
ரவ்நீத் சிங் - உணவு பதப்படுத்துதல் துறை, ரயில்வேத் துறை
துர்காதாஸ் உய்க்கே - பழங்குடியினர் விவகார அமைச்சகம்
ரக்ஷா நிகில் கட்சே - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை
சுகந்த மஜும்தர் - கல்வித் துறை
சாவித்ரி தாக்குர் - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்
டோகன் சாஹு - வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாடு
ராஜ் பூஷன் செளத்ரி - நீர்வளத் துறை
பூபதி ராஜூ சீனிவாச வர்மா - எஃகு மற்றும் கனரக தொழில் துறை
ஹர்ஷ் மல்ஹோத்ரா - பெருநிறுவன விவகாரம், நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து
நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகம்
முரளிதர் மோஹல் - விமானத் துறை, கூட்டுறவுத் துறை
ஜார்ஜ் குரியன் - சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை
பபித்ரா மார்கரெட்டா - வெளியுறவு, ஜவுளித் துறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.