-
இந்தியா

வீடு வீடாகக் கதவைத் தட்டி தண்ணீர் கேட்ட பயங்கரவாதிகள்

கதுவாவில் நேற்று பயங்கரவாதிகள் வீடு வீடாகக் கதவைத் தட்டி தண்ணீர் கேட்டதாக காவல்துறை தகவல்.

DIN

கதுவா பகுதியில் நேற்று பொதுமக்களை நோக்கி தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, இரண்டு பயங்கரவாதிகள் வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி குடிக்கத் தண்ணீர் கேட்டதாகவும், அவர்களைப் பார்த்த மக்கள் கதவுகளை மூடிவிட்டு பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

மக்கள் தண்ணீர் கொடுக்காததால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், சர்வதேச எல்லை வழியாக சைதா சுகல் கிராமத்துக்குள் நேற்று இரவு 7 மணிக்கு ஊடுருவிய பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களிடம் தண்ணீர் கேட்டுள்ளனர். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் உடனடியாக பாதுகாப்புப் படைக்குத் தகவல் கொடுத்து, அவர்கள் விரைந்து வந்து பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் பலத்த காயமடைந்தார். அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

கதுவா மாவட்ட சா்வதேச எல்லையில் அந்த பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் ஒருவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா். தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் புதன்கிழமை முற்பகலில் மற்றொரு பயங்கரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீா் ரீசி மாவட்டத்தில் அண்மையில் சுற்றுலாப் பேருந்து மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளாக இவர்கள் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

ரீசி மாவட்டத்தில், சில தினங்களுக்கு முன்னா் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பேருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. அதில் பக்தா்கள் 9 போ் உயிரிழந்தனா். 41 போ் பலத்த காயமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT