பதின்ம வயதில் (டீன் ஏஜ்) குழந்தைப் பெறுவது கேரளத்தில் அதிகமாகி வருகிறது.
2022 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் வெளியிட்டப்பட்டுள்ள தரவுகள் அடிப்படையில், 15-19 வயதிற்குள்பட்ட இளம்பெண்களுக்கு 12,939 புதிதாக குழந்தைகள் பிறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் பிரசவத்தில் 12,606 குழந்தைகளும், இரண்டாவது பிரசவத்தில் 215 , மூன்றாவது பிரசவத்தில் 67, நான்காவது பிரசவத்தில் 27, ஐந்தாவது பிரசவத்தில் 5, ஆறாவது பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.
15 வயதுக்குள்பட்ட தாய்மார்களுக்கு 7 குழந்தைகள் பிறந்துள்ளதாக பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தின் கருத்துப்படி, 18 வயதுக்கு முன் குழந்தை பெற்றுகொள்வது, அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை தடம்புரளச் செய்து, கல்வி, வாழ்வாதாரம், ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது குழந்தை பிறப்பு சற்றே குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், 15-19 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு 15,501 குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களில் ஐந்து பேர் 15 வயதுக்குள்பட்ட இளம் தாய்மார்கள் ஆவர்.
அரசாங்கத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவுகள் மதவாரியான பிரிவையும் வழங்கியுள்ளன. மொத்தமாக உள்ள 12,939 குழந்தைகளில், 4,465 இந்து குடும்பங்களிலும், 7,412 முஸ்லிம் குடும்பங்களிலும், 417 கிறிஸ்தவ குடும்பங்களிலும், 641 குழந்தைகள் பிற மதங்களிலும் பிறந்துள்ளன.
சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் குழந்தை பிறப்பு வீதம் 14.74 உடன் மலப்புரம் முதலிடத்திலும், வயநாடு (10.11), கோழிக்கோடு (9.7) ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இடுக்கி (6.04), ஆலப்புழா (5.93), பத்தனம்திட்டா (5.55) ஆகிய இடங்களில் பிறப்புவீதம் குறைவாக உள்ளது.
2022 இல் அதிகபட்சமாக மலப்புரத்தில் (89,647), கோழிக்கோடு (47,399) மற்றும் எர்ணாகுளத்தில் (39,469) குழந்தைகள் பிறந்துள்ளன. பத்தனம்திட்டா (13,995), வயநாடு (13,207), இடுக்கி (10,549) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 2022 இல் பிறந்த மொத்த குழந்தைகளில், 1,90,860 குழந்தைகள் இந்து குடும்பங்களில் பிறந்தவை.
இது 2021 ஆம் ஆண்டைவிட 5.22% அதிகரித்துள்ளது. முஸ்லீம் குடும்பங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1,42,634 ஆகும். இது 15.75% குறைவாகும். கிறிஸ்தவ குடும்பங்களில் 64,138 குழந்தைகள் பிறந்துள்ளன. இது 7.32% உயர்வாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.